மாவட்ட செய்திகள்

குமரிக்கு 16,600 டோஸ் தடுப்பூசிகள் வந்தன + "||" + Vaccines

குமரிக்கு 16,600 டோஸ் தடுப்பூசிகள் வந்தன

குமரிக்கு 16,600 டோஸ் தடுப்பூசிகள் வந்தன
குமரிக்கு 16,600 டோஸ் தடுப்பூசிகள் வந்தன
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 44 ஆயிரத்து 153 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசியும், 70 ஆயிரத்து 16 பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதற்கிடையே தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு நேற்று 1,600 கோவேக்சின் தடுப்பூசிகளும், 15 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 600 தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை தற்போது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி மருந்துகள் வந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு முதன் முறையாக ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
2. புனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
3. புனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனேவில் இருந்து 2 லட்சத்து 64 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.
4. புனேவில் இருந்து சென்னைக்கு 8 லட்சத்து 61 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன
புனேவில் இருந்து சென்னைக்கு 8 லட்சத்து 61 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன.
5. புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 6 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 6 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.