மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது எப்படி?-நீதிபதி கருணாநிதி தகவல்
மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து நீதிபதி கருணாநிதி விளக்கம் அளித்து உள்ளார்.
சிவகங்கை,
மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து நீதிபதி கருணாநிதி விளக்கம் அளித்து உள்ளார்.
நிரந்தர மக்கள் நீதிமன்றம்
சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஒரு அங்கமாக இருந்து வந்த மக்கள் நீதிமன்றத்தை உயர் நீதிமன்றம் தனியாக பிரித்து நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்பட உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது.
இந்த நீதிமன்றத்தில் பொதுமக்கள் கோர்ட்டு வழக்கில் இல்லாத தபால்துறை, குடிநீர், மின்துறை, பொது சுகாதாரம், காப்பீட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து, வீட்டுமனை நடவடிக்கைகள் போன்ற பொது பயன்பாட்டு சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.இந்த நீதிமன்றத்தில் தினசரி வேலை நேரத்தில் நேரடியாக வந்து மனுக்கள் தரலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு இந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மனு எழுதி கொடுப்பார்கள்.
கட்டணம் செலுத்த வேண்டாம்
நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் இரு தரப்பினரும் நேரடியாக பேசி சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தில் இந்த நீதிமன்றத்திற்கு 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் வந்தன. இதில் தற்போது 15 வழக்குகள் மட்டுமே விசாரணையில் உள்ளது. மற்றவர்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.
எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பொது பயன்பாட்டு சேவை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story