முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 16 July 2021 11:43 PM IST (Updated: 16 July 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் அபராதம் விதிக்கப்பட்டது.

சோளிங்கர்
சோளிங்கரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் அபராதம் விதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.  ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் முகக் கவசம் அணியாமல் வருவோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்க மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார். 

அதன்படி சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமார், வருவாய் ஆய்வாளர் யுவராஜ், கிராம நிர்வாக அலுவலர் சானு மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் சோளிங்கர் அண்ணாசிலை கருமாரியம்மன் கூட்டுச்சாலை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு தலா 200 ரூபாய் வீதம் 25 பேருக்கு அபராதம் விதித்தனர். அவர்களுக்கு கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story