குளத்தில் காடுபோல வளர்ந்துள்ள செடி, கொடிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


குளத்தில் காடுபோல வளர்ந்துள்ள செடி, கொடிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 July 2021 6:29 PM GMT (Updated: 16 July 2021 6:29 PM GMT)

நொய்யல் அருகே குளத்தில் காடுபோல வளர்ந்துள்ள செடி, கொடிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்
குளம்
நொய்யல் அருகே கவுண்டன்புதூர், செட்டிதோட்டம், செல்வநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் வகையில் கால்வாய் கவுண்டன்புதூரில் இருந்து தொடங்கி செட்டிதோட்டம், செல்வநகர் வழியாக முத்தனூர் புகளூர் வாய்க்கால் வரை வெட்டப்பட்டது. மேலும் புகளூர் வாய்க்காலில் கலக்கும் இடத்தில் பெரிய குளம் ஒன்று வெட்டப்பட்டது. உபரி நீர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் குளத்திற்குள் சென்று குளம் நிரம்பி புகளூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உள்ளது.
மழைநீர்
இந்நிலையில் உபரி நீர் கால்வாய் நெடுகிலும் சம்பு மற்றும் பல்வேறு வகையான செடிகொடிகள் முளைத்துள்ளன. அதேபோல் குளம் முழுவதும் காடுகள் போல் 5 அடி உயரத்தில் சம்பு மற்றும் பல்வேறு செடி, கொடிகள் ஆக்கிரமித்து முளைத்துள்ளன. தற்போது விவசாய தோட்டங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் தங்கு தடையின்றி செல்ல முடியாமல் உள்ளது. மேலும் வரும் மாதங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழை நீரும் இந்த உபரி நீர் கால்வாய் வழியாக செல்லும்போது உபரி நீர் கால்வாய் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். 
கோரிக்கை 
எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாய் நெடுகிளும் முளைத்துள்ள சம்பு மற்றும் செடி கொடிகளையும், வாய்க்கால் ஓரத்தில் வெட்டப்பட்டுள்ள குளத்தில் முளைத்துள்ள சம்பு மற்றும் செடி கொடிகளிலும் அகற்றி மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படாத வகையில் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story