ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு 2 மாணவிகள் தேர்வு
ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் பங்கேற்க அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கீழப்பழுவூர்:
சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் சார்பில் 2021-ம் ஆண்டிற்கான உலக அளவிலான வானவியல் ஆராய்ச்சிகள் தொடர்பான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சியில் கலந்து கொள்வார்கள். இந்த போட்டியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-1 மாணவிகள் ரகசியா மற்றும் வேதாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு முதல் 10 இடங்களுக்குள் வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவிகள் விண்வெளி பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து அந்த மாணவிகளுக்கு, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார். மேலும் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி மற்றும் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இன்பராணி ஆகியோரும் மாணவிகளை பாராட்டினர்.
Related Tags :
Next Story