மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இருக்கன்குடி
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.
கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி, அறங்காவலர்கள், ேகாவில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
சாத்தூர்
அதேபோல சாத்தூரில் முக்குராந்தல்லில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைபோல் படந்தால் துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story