கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 17 July 2021 2:41 AM IST (Updated: 17 July 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

பழவூர் அருகே கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வடக்கன்குளம்:
கூடங்குளம் அருகே உள்ள வைராவி கிணறை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). இவர் பழவூர் அருகே பொன்னார்குளத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலையில் அங்கு பாறைகளுக்கு வெடி வைத்த பிறகு மேலே உள்ள கற்களை கடப்பாரையால் மணிகண்டன் கீழே தள்ளிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி அங்குள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story