டிஜிட்டல் பேனரில் வீச்சரிவாளுடன் படம்; ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு
சங்கரன்கோவில் அருகே டிஜிட்டல் பேனரில் வீச்சரிவாளுடன் படம் இடம்பெற்றது தொடர்பாக ராணுவவீரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே வடமலாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). ராணுவ வீரரான இவர் அருணாசலபிரதேச மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் சுரேஷின் உறவினரின் திருமணத்தை முன்னிட்டு, சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதில் சுரேஷ் வீச்சரிவாளுடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து சுரேஷ் மற்றும் அச்சக உரிமையாளரான சங்கர நாராயணன் ஆகியோர் மீது சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story