கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் பெண் சாவு


கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் பெண் சாவு
x
தினத்தந்தி 17 July 2021 6:35 AM IST (Updated: 17 July 2021 6:35 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் கழுத்து இறுகி சம்பவ இடத்திலேயே இளம்பெண் பலியானார்.

சமயபுரம், 
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு தத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி இளவரசி (வயது 32). இவர் கரும்புச்சாறு வியாபாரம் செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் மண்ணச்சநல்லூரில் உள்ள காசுக்கடை தெருவில் இருக்கும் பிள்ளையார் கோவில் அருகே எந்திரத்தில் கரும்புச்சாறு பிழிந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதில் அவர் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளவரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story