ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு


ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 July 2021 7:26 AM IST (Updated: 17 July 2021 7:26 AM IST)
t-max-icont-min-icon

ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை துபாஷ் தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் அஜய் (வயது 20). இவர் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவியுடன் அடிக்கடி இரவு நேரத்தில் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் மாணவியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிய மாணவியை மறுநாள் காலை பார்த்த போது காணவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவியை பற்றிய தகவல் தெரியவில்லை. இதனால் மாணவியுடன் அடிக்கடி செல்போனில் பேசிய அஜயை தேடி சென்று பார்த்த போது அந்த வாலிபரையும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து,மாணவியையும், அவரை கடத்தி சென்ற அஜய்யையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story