பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2021 5:54 AM GMT (Updated: 17 July 2021 5:54 AM GMT)

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை, 

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை தினந்தோறும் உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முகமது அபூபக்கர் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்கள் கே.எம்.நிஜாமுதீன், மில்லத் எஸ்.பி. முகமது இஸ்மாயில், துணைச்செயலாளர்கள் எஸ்.ஏ.இப்ராகிம் மக்கி, ஆப்பனூர் ஆர்.ஜபருல்லா, கே.ஏ.டபிள்யூ.காதர் ஷரீப் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், முகமது அபூபக்கர் பேசியதாவது:-

மத்திய பா.ஜ.க. ஆட்சி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்காமல், மதங்களுக்கு இடையே வேறுபாடுகளை அதிகப்படுத்தி மததுவேசங்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் கொங்குநாடு என்ற புது முழக்கத்தை ஏற்படுத்தி பா.ஜ.க. தனது அரசியல் லாபத்துக்காக எதையும் செய்யலாம் என்று துணிந்திருப்பதை கண்டிக்கிறேன். ஒன்றுபட்ட தமிழகமே அனைவருடைய விருப்பம். பா.ஜ.க.வின் சூட்சுமம் இங்கு ஒரு காலமும் எடுபடாது.மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சிகளையும் ஒன்றுதிரட்டி தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி கண்டார். முதல்-அமைச்சராக பதவி ஏற்றப்பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்தபோது பா.ஜ.க.வுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மு.க.ஸ்டாலினின் முயற்சி வெற்றி பெறும். காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி உருவாக நாங்கள் என்றும் துணை நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story