சரக்கு வேனில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சரக்கு வேனில் கடத்திய 2½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கீழ்கரிப்பூர் கிராமம் அருகே மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மணி, பார்த்தசாரதி, ஏட்டு கலையரசி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் வழிமறித்தனர். உடனே வேன் டிரைவர் உள்பட 2 பேர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில், 2½ டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story