ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 ஆயிரம்; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்த ஏட்டு
திண்டுக்கல் கலெக்டர் அருகே ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 ஆயிரத்தை போலீஸ் ஏட்டு கைப்பற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பார்த்தசாரதி (வயது 45). அவருடைய வீடு, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளது. இந்தநிலையில் பார்த்தசாரதி நேற்று காலை பணி முடிந்து வேடசந்தூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் நோட்டுகள் வெளி வந்த நிலையில் கேட்பாரற்று இருந்தது.
ஏ.டி.எம். மையத்தில் காவலாளியும் இல்லாத நிலையில், அந்த பணத்தை உரிமை கோர யாராவது வருகிறார்களா? என்று பார்த்தசாரதி சிறிது நேரம் எதிர்பார்த்தார். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் அவர் அந்த பணத்தை எடுத்து, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவில் ஒப்படைத்தார். போலீஸ் ஏட்டுவின் இச்செயலை சக போலீஸ்காரர்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story