பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தேன்கனிக்கோட்டை பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்வர், மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கோட்டைவாசல் பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டி, சைக்கிள்களில் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் கெலமங்கலம் சாலை, பஜார் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக சென்றது. ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், தளி தொகுதி பொறுப்பாளர் அப்துல் ரகுமான், சமூக ஊடக பிரிவு கீர்த்தி கணேஷ், தேன்கனிக்கோட்டை நகர தலைவர் கோபிநாத், வட்ட தலைவர் பார்த்திபன் மற்றும் சபியுல்லா, டி.கே.தாஸ், ஜெயக்குமார், அன்னையாரெட்டி, மஹ்மூத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story