மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டக்கூடாது-செயற்பொறியாளர் அறிவுறுத்தல்
மின்கம்பங்கள், மின்மாற்றிகளில் விளம்பர பதாகைகள் கட்டக்கூடாது என்று மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் அறிவுறுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின் விபத்துகள்
மழைக்காலத்தில் மின் விபத்துகள் ஏற்படாத வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ள மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின் கம்பங்களின் ஸ்டே கம்பியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கட்டவோ, துணிகளை உலர்த்தவோ கூடாது.
அறுந்து கிடக்கும் மின் வயர்கள் குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கோ அல்லது 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மின் கம்பங்கள் மற்றும் வயர்களுக்கு இடையே குறைந்த பட்சம் 4 அடி விட்டு கட்டிடங்களை கட்ட வேண்டும்.
ஈரக்கைகளால்...
மின்சார விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைத்து விட்டு மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெர்விக்க வேண்டும். ஈரமான கைகளால் மின் சாதனங்களை தொடவோ, இயக்கவோ கூடாது. மின் விபத்தில் ஒருவர் சிக்கினால், அவரை தொட்டு காப்பாற்ற முயற்சிக்க கூடாது. பாதிப்புக்கு உள்ளானவரை உலர்ந்த கட்டையை கொண்டு காப்பாற்றலாம்.
மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் விளம்பர தட்டிகள், பதாகைகள் போன்றவை கட்டக்கூடாது. மின் கம்பங்களில் கேபிள் டி.வி. வயர்கள் கட்டக்கூடாது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story