அரூர் அருகே தேசத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


அரூர் அருகே தேசத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 17 July 2021 10:28 PM IST (Updated: 17 July 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே தேசத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

அரூர்:
அரூர் அருகே உள்ள கட்டரசம்பட்டியில் தேசத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி  தீர்த்தக்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து,  அம்மனுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், கலசம் வைத்தல், யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடம் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கோபுரம் மற்றும் அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம்  நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. விழாவில் சம்பத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story