பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி
திருப்பூர், ஜூலை.18-
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ரேவதி மெடிக்கல் சென்டருடன் இணைந்து நேற்று, திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் உள்ள கிட்ஸ் இம்பெக்ஸ் நிறுவனத்தில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 202 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் இந்திய தொழில் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட தலைவர் திருக்குமரன் மற்றும் துணைத்தலைவர் மில்டன், முன்னாள் தலைவர் வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, துணை நிர்வாக இயக்குனர் கவுசிக், டாக்டர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஜே.ஜே.மில்ஸ் நிறுவனத்தில் ஏ.எம்.சி. மருத்துவமனையுடன் நடந்த முகாமில் 2020 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் சண்முகராஜன், வெங்கட்ராமன், டாக்டர் பிரபு சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், கூத்தம்பாளையம் மிரா கிரியேஷன்சில், சரண் மருத்துவமனையுடன் நடந்த முகாமில் 102 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நிர்வாக பங்குதாரர் சதீஷ்குமார், மனிதவள மேம்பாட்டு அதிகாரி சந்தியா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுபோல் அய்யம்பாளையத்தில் உள்ள சந்தோஷ் கார்மென்ட்ஸ்சில், சரண் மருத்துவமனையுடன் இணைந்து 2-வது கட்டமாக நடந்த முகாமில் 217 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் நிறுவன நிர்வாக அதிகாரி நாச்சிமுத்து, மனிதவள மேம்பாட்டு அதிகாரி ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 15 வேலம்பாளையத்தில் உள்ள அறிவுத்திருக்கோவில் அக்சயா டிரஸ்டில், ஏ.எம்.சி. மருத்துவமனையுடன் இணைந்து தடுப்பூசி முகாம் நடக்கிறது.
Related Tags :
Next Story