ஆடிமாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடிமாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 July 2021 10:48 PM IST (Updated: 17 July 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

ஆடிமாத பிறப்பையொட்டி கரூரில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்
ஆடிமாதம்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும், வாழ்க்கையில் சகல துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது. 
மாரியம்மன் கோவில்
அந்தவகையில் நேற்று ஆடி மாதத்தின் முதல்நாளையொட்டி கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வருகைதந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் முன்புறம் சூடம், விளக்கேற்றி வழிபாடு செய்தனர். 
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
இதேபோல் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரூர் பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story