புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இறந்தார். மேலும் ஏற்கனவே மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story