திருப்பூர் நொய்யல் ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் நொய்யல் ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் நொய்யல் ஆற்றில் புதர்மண்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நொய்யல் ஆறு
திருப்பூரின் ஜீவநதி என நொய்யல் ஆறு அழைக்கப்படுகிறது. கோவையில் இருந்து தொடங்கும் நொய்யல் ஆறு, திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் வரை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு இருந்துள்ளது. இதன் பின்னர் திருப்பூரில் உள்ள சாய, சலவை ஆலைகள் சிலவற்றின் காரணமாக நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலக்கப்பட்டு, நீர்நிலை மிகவும் மோசமடைந்தது.
இதன் பின்னர் பல்வேறு அமைப்புகள் நொய்யல் ஆற்றை சீரமைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நொய்யல் ஆறு முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் புதர் மண்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
புதர் மண்டி கிடக்கும் அவலம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்து பலர் வீணடித்தனர். இதன் பின்னர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளின் காரணமாக இந்த சம்பவம் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் மழைக்காலங்களில் இன்னமும் சாயக்கழிவுநீர் திறந்துவிடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதற்கிடையே நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
ஒரு சில இடங்களில் தூர்வாரும் பணி நடந்தாலும், முழுவதுமாக நடைபெறாமல் இருப்பதால் நொய்யல் ஆற்றில் புதர் மண்டி கிடக்கிறது. இவ்வாறு இருப்பதன் மூலம் மழைக்காலங்களில் கூட நொய்யல் ஆற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story