கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோத்தகிரி
கோத்தகிரி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 1-ந் தேதி மற்றும் ஆடி மாத அமாவாசை, ஆடிவெள்ளி நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இந்த நிலையில் நேற்று ஆடி மாதம் தொடங்கியதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மனை அமர வைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக வழிபாட்டில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அம்மனை தரிசனம் செய்து சென்றனர். இதேபோல கோத்தகிரி கடைவீதி பண்ணாரி மாரியம்மன் கோவில் மற்றும் டானிங்டன் கருமாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story