பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது


பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 July 2021 11:05 PM IST (Updated: 17 July 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

ஊத்துக்குளி
குன்னத்தூர் கருமஞ்சிறையைச்சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது49). இவர் தனது மனைவி லட்சுமியுடன் (46)  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குன்னத்தூரில் இருந்து செங்கப்பள்ளி நோக்கி ஸ்கூட்டரில் சென்றார். விருமாண்டம்பாளையத்தை அடுத்த நொச்சிகாடு பிரிவு அருகே வந்தபோது அவரது வாகனத்துக்கு பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபர்  ஈஸ்வரன் வந்த ஸ்கூட்டரை வழிமறித்து லட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து ஈஸ்வரன் ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் குமரவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 
இந்நிலையில் நேற்று ஊத்துக்குளி போலீசார் மொரட்டுபாளையம் டாஸ்மாக் கடை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். போலீசார் மேலும் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியபோது அவர் ஊத்துக்குளி சென்னிமலைசாலையை சேர்ந்த சிரஞ்சீவி (24) என்பதும் நொச்சிகாடு பிரிவு அருகில் லட்சுமியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சிரஞ்சீவியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 7 பவுன் நகையை  மீட்டனர். மேலும் அவரை அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

Next Story