நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 July 2021 12:09 AM IST (Updated: 18 July 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்ைவ கண்டித்து ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ராமநாதபுரம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், கொங்குநாடு என்ற பெயரில் தமிழகத்தை துண்டாட நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கண்இளங்கோ தலைமை தாங்கினார்.. மாவட்ட தலைவர் நாகூர்கனி முன்னிலை வகித்தார்.
 இதில் திருவாடானை தொகுதி பொருளாளர் ஜவகர், தொகுதி தலைவர் மணிவண்ணன், தொகுதி செயலாளர் குமார், மாவட்ட நிர்வாகி குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தை கொங்குநாடு என்ற பெயரில் துண்டாட நினைக்கும் மத்திய அரசு உடனடியாக அந்த முடிவை கைவிட வேண்டும், அதனை மீறி தொடர்ந்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியாவை 29 பகுதிகளாக பிரித்து அமைக்க வேண்டும், சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டும், ஆரம்பத்தில் மானியத்தொகை அதிகளவில் வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மானியம் என்ற பெயரில் ரூ.50 வரை மட்டுமே வழங்கி விலையை மட்டும் பல மடங்கு ஏற்றி வருவதை கைவிட்டு மானியத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.



Next Story