ராமநாதபுரத்தில் நடந்த விபத்தில் மாற்றுத்திறனாளி பலி


ராமநாதபுரத்தில் நடந்த விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
x
தினத்தந்தி 18 July 2021 12:36 AM IST (Updated: 18 July 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடந்த விபத்தில் மாற்றுத்திறனாளி பலியானார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள ஜமீன்தார்வலசை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் முனீஸ்வரன் (வயது 40). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரிசி குடோன் லாரி உரிமையாளர் சங்கத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் நேற்று முன்தினம் தனது ஊனமுற்றோர் மூன்று சக்கர சைக்கிளில் பாரதி நகர் பகுதியில் இருந்து சங்க அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது டி.பிளாக் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தவறிவிழுந்து விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த முனீஸ்வரன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து அவரது தந்தை பால்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story