கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 10 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 191 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 534 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
மாவட்டத்தில் நேற்று 2,954 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 5,090 டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் ஒருவரும் உயிரிழக்கவில்லை.
Related Tags :
Next Story