ஆடி மாத பிறப்பு: கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி மாத பிறப்பு: கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 18 July 2021 1:58 AM IST (Updated: 18 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத பிறப்பையொட்டி நெல்லையில் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லை:
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பான நேற்று கோ பூஜை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் விசுவரூப தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் பெரிய திருவடியான கருடன் சன்னதி முன்பு கோ பூஜை நடைபெற்றது. இதில் பசுவுக்கு புதிய வஸ்திரம் சாற்றப்பட்டு, லட்சுமி அஷ்டோத்திரம் கொண்டு பூக்களால் அர்ச்சிக்கப்பட்டது. பின்னர் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் கோமாதாவை வலம் வந்து தரிசனம் செய்தனர்.

ஆடிமாத பிறப்பையொட்டி, நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதியம்மன் சன்னதியிலும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Next Story