மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்றார், நெல்லை ஆசிரியை + "||" + Nellai teacher took over as the Thoothukudi District Education Officer.

தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்றார், நெல்லை ஆசிரியை

தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்றார், நெல்லை ஆசிரியை
நெல்லையை சேர்ந்த ஆசிரியை தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மாவட்ட கல்வி அலுவலருக்கான தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட 20 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்/

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி புனித தோமையார் உயர்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த சங்கீதா சின்னராணி தூத்துக்குடி மாவட்ட பயிற்சி கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை