சபையார் குளத்தில் புதர்களை வெட்டி அகற்றிய கலெக்டர்
நாகர்கோவில் சபையார் குளத்தில் புதர்களை கலெக்டர் அரவிந்த் வெட்டி அகற்றினார். இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் சபையார் குளத்தில் புதர்களை கலெக்டர் அரவிந்த் வெட்டி அகற்றினார். இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
துப்புரவு பணி
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கரியமாணிக்கபுரம் சபையார் குளத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறப்பு கூட்டு துப்புரவு பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. அதாவது குளத்தின் கரையில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அகற்றி குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்தன.
இந்த பணிகளை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார். அதோடு தானும் மண் வெட்டி எடுத்து முட்புதர்களை வெட்டி அகற்றினார். அவருடன் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் மாநகர் நல அதிகாரி கிங்சால் ஆகியோரும் துப்புரவு பணி மேற்கொண்டனர். புதர்களை வெட்டி அகற்றியதும், அங்கு கலெக்டர் அரவிந்த் மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார்.
பொதுமக்கள் பாராட்டு
கலெக்டர் அரவிந்த் துப்புரவு பணி மேற்கொண்டதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story