ரெயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு
ரெயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு
நாகர்கோவில்:
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் விரிவாக்கம் மற்றும் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் முகுந்த் நேற்று ஆய்வு செய்தார். மேலும், அவர் நடைமேடை சரியாக பராமரிக்கப்படுகிறதா? இருக்கைகள், பயணிகள் ஓய்வு அறை, பாதுகாப்பு அறை உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பயணிகளுக்கு டிக்கெட் வழக்கும் இடம், தட்கல் டிக்கெட் எடுக்கும் இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
இதேபோல கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கும் கோட்ட மேலாளர் முகுந்த் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவருடன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் உடன் சென்றார்.
Related Tags :
Next Story