கோவில்பட்டியில் சுரங்க வழிப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி
கோவில்பட்டி சுரங்க வழிப்பாதையில் நேற்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சுரங்க வழிப்பாதையில் முதல் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
சுரங்க வழிப்பாதை
கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள ரெயில்வே சுரங்க வழிப்பாதையின் மத்திய பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாகவும், நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையில் தேங்கும் நீரை வெளியேற்ற வசதியாக சாய்வு தளம் அமைக்கும் பணியை கடந்த 12-ந் தேதி தொடங்கியது இதற்காக மத்திய பகுதியில் ஏற்கனவே போடப்பட்ட சிமெண்டு காங்கிரீட் சிலாப்புகள் உடைக்கப்பட்டு அந்த பகுதியில் தண்ணீர் வழிந்தோட வசதியாக சாய்வாக காங்கிரீட் போடப்பட்டது.
போக்குவரத்து தொடங்கியது
இந்த நிலையில் சுரங்க வழிப்பாதையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் வழக்கம் போல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான வாகனங்கள் அந்த வழியாக சென்றது.
இன்று (திங்கட்கிழமை) காலையில் கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் அரசு குடியிருப்பு எதிரில் அமைந்துள்ள பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் 15 மீட்டர் அளவில் அகலப்படுத்தி கட்டும் பணிகள் தொடங்குகிறது.
நெடுஞ்சாலை துறை என்ஜினீயர்கள் மேற்பார்வையில் பாலம் வேலைகள் நடக்கும் போது போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு வேலையை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story