பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 July 2021 5:37 PM IST (Updated: 18 July 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் பாலக்கோம்பை சாலைப் பிரிவில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரியும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் பழனி மேற்கு மாவட்ட செயலாளர் வினோத், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் செந்தில், நகர செயலாளர் வேல்முருகன் மற்றும் மாரிமுத்து, சரவணன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story