நெல் சாகுபடி குறித்த தொழில் நுட்பப்பயிற்சி


நெல் சாகுபடி குறித்த  தொழில் நுட்பப்பயிற்சி
x
தினத்தந்தி 18 July 2021 6:08 PM IST (Updated: 18 July 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

நெல் சாகுபடி குறித்த தொழில் நுட்பப்பயிற்சி

போடிப்பட்டி
அமராவதி அணையிலிருந்து ராமகுளம் மற்றும் பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் ருத்ராபாளையம், கொழுமம், குருவக்களம் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் குறுவை சாகுபடிக்கேற்ற நெல் ரகங்கள், விதைத் தேர்வு, விதை நேர்த்தி செய்தல், நாற்றங்கால் தயாரிப்பு, நெற்பயிருக்கு உர மேலாண்மை, களை நிர்வாகம், உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் பூச்சி நோய் நிர்வாகம் குறித்து விளக்கிக் கூறினர்.
நெல் ரகங்கள் மற்றும் மானியங்கள் குறித்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி விளக்கிக் கூறினார். மேலும் நெற்பயிரில் குறைந்த செலவில் பூச்சி நோய் மேலாண்மை குறித்து உதவி வேளாண் அலுவலர் சுந்தரம் வழிகாட்டல்கள் வழங்கினார். அட்மா தொழில் நுட்ப மேலாளர் அஷ்ரப் அலி விவசாயிகளுக்கான கூட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

---


Next Story