சாயக்கழிவுநீர்


சாயக்கழிவுநீர்
x
தினத்தந்தி 18 July 2021 6:36 PM IST (Updated: 18 July 2021 6:36 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நொய்யல் ஆற்றில் நேற்று சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது.

திருப்பூர்
திருப்பூர் நொய்யல் ஆற்றில் நேற்று சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது.
சாயக்கழிவுநீர்
திருப்பூரில் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இதில் ஆடைகளுக்கு சாயமேற்றி கொடுக்கும் சாய, சலவை ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. ஆனால் அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் இயங்கி வருகிற சாய, சலவை ஆலைகள் சாயக்கழிவுநீரை நொய்யல் ஆற்றில் திறந்து விடுகின்றன.
குறிப்பாக மழைக்காலங்களில் இந்த சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் நேற்று திருப்பூர் வளம்பாலம் அருகே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது.
நடவடிக்கை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
திருப்பூர் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் ஓடுவது மிகவும் கவலையளிக்கிறது. மழைக்காலங்களை குறிவைத்து பலர் இவ்வாறு செய்து வருகிறார்கள். இதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றை நன்றாக கண்காணிக்க வேண்டும். வழக்கமான நாட்களை விட மழைக்காலங்களில் பலர் மழைநீருடன், கழிவுநீரையும் திறந்துவிடுகிறார்கள்.
இதனால் நீர்வளம் மற்றும் நிலவளம் பாதிக்கப்படுகிறது. இந்த மழைநீரையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை பருகுகிற கால்நடைகளும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றன. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story