திருப்பத்தூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
திருப்பத்தூரில் விடிய விடிய பெய்த பலத்த மழைகாரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
திருப்பத்தூர்
விடிய விடிய மழை
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.
திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. திருப்பத்தூரில் அண்ணா நகர், கலைஞர் நகர், டி.எம்.சி. காலனி, ராமக்கபேட்டை 3-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி மழை நீருடன் வீட்டுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் விடிய விடிய கழிவுநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
தகவலறிந்து திருப்பத்தூர் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், துப்புரவு ஆய்வாளர் விவேக் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அண்ணாநகர் பகுதியில் உள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்றிவிட்டு கல்வெட்டு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
நள்ளிரவு 12 மணிமுதல் விடிய விடிய நகராட்சி சார்பில் மோட்டார் வைத்து கழிவு நீரை வெளியேற்றிறனார்கள். விடிய விடிய பணிபுரிந்த நகராட்சியினரை கலெக்டர் அமர் குஷ்வாஹா பாராட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
திருப்பத்தூர்- 65.50, நாட்டறம்பள்ளி- 60, திருப்பத்தூர் சக்கரை ஆலை பகுதி- 25, ஆம்பூர், வாணியம்பாடி - 22.40, ஆலங்காயம்- 8.20, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதி- 7.
Related Tags :
Next Story