அரக்கோணம் அருகே மாடு மேய்த்த மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை
அரக்கோணம் அருகே ஆடு மேய்க்கச்சென்ற மூதாட்டியை கொலைசெய்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அரக்கோணம்
பிணமாக கிடந்த மூதாட்டி
அரக்கோணம் அடுத்த அம்பிரிஷிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சரோஜம்மாள் (வயது 72). இவர் நேற்று மதியம் அங்குள்ள மேலேரி பகுதியில் மாடு மேய்க்கச்சென்றார். அங்கு அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவருடைய மகன் கோவர்தன் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை பார்த்தபோது அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சரோஜம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கவரிங் நகை கொள்ளை
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்திய போது மூதாட்டி அணிந்திருந்தது கவரிங் நகைகள் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செல்வகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக்காக மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story