பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 18 July 2021 10:08 PM IST (Updated: 18 July 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தொண்டி, 
திருவாடானையில் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் பி.எம்.ஆர்.மகாலில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் அஞ்சுகோட்டை ஆணிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் தமிழக பா.ஜ.க.தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை, மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முருகன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள், கிளை பொறுப்பாளர்கள், சக்திகேந்திராஅணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொதுச் செயலாளர் கீழ்க்குடி ஈஸ்வரன் நன்றிகூறினார்.

Next Story