கூடலூரில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கூடலூரில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 18 July 2021 10:47 PM IST (Updated: 18 July 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கூடலூர்

கூடலூர் ஹெல்த்கேம் பகுதியில் உள்ள சத்ய சாய்பாபா கோவிலில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு சத்ய சாய் சேவா சமிதி மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். 

தாசில்தார் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரிசையாக நின்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என ஆர்.டி.ஓ. கேட்டுக்கொண்டார். 

முன்னதாக 900 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Next Story