நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கூடலூரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூர்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு சாரல் மழையில் நின்றவாறு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் கேதீஸ்வரன் தலைமை தாங்கினார். பொருளாளர் சிவகுமாரன், செய்தி தொடர்பாளர் அரிகிருட்டிணன், இணை தலைவர் பத்மநாதன், வேலாயுதம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் பந்தலூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பொன்.மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.
Related Tags :
Next Story