மண்சரிவால் சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்


மண்சரிவால் சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்
x
தினத்தந்தி 18 July 2021 10:49 PM IST (Updated: 18 July 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே மண்சரிவால் சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது.

பந்தலூர்

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் இருந்து காரக்கொல்லிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு, மின்கம்பம் ஒன்று சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அய்யன்கொல்லி- காரக்கொல்லி இடையே சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டது, அந்தரத்தில் மின்கம்பம் தொங்குகிறது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. 

எனவே விரைந்து மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய இடத்தில் மின்கம்பத்தை நட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story