பெரணமல்லூர் அருகே; சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
பெரணமல்லூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் 26-ந்் தேதி தனது 16 வயது மகளை காணவில்லை என்று பெரணமல்லூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி நேற்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் 16 வயது சிறுமியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவரை நிறித்தி விசாரணை நடத்தியதில் அவர் மரக்கோணம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பதும், உடனிருந்த சிறுமியை அவர் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story