9½ அடி நீளமுள்ள சாரைபாம்பு பிடிபட்டது
9½ அடி நீளமுள்ள சாரைபாம்பு பிடிபட்டது
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோட்டில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் உருளைக்கிழங்குகளை தரம் பிரிக்கும் பகுதி அருகே மூங்கில் புதர்களுக்கு இடையே ஒரு பாம்பு இருப்பது தெரியவந்தது.
உடனே இதுகுறித்து பாம்பு பிடி வீரர் ஒயிட் பாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார்.
அது சாரை பாம்பு என்பது தெரியவந்தது. 9½ அடி நீளமுள்ள அந்த பாம்பை அவர் லாவகமாப பிடித்து சாக்குப்பையில் போட்டு கட்டினார்.
பின்னர் அந்த பாம்பு மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story