சரக்கு ரெயில் மூலம் 1,300 டன் உரம் திருச்சிக்கு வந்தது
கேரள மாநிலத்தில் சரக்கு ரெயில் மூலம் 1,300 டன் உரம் திருச்சிக்கு வந்தது
திருச்சி,
திருச்சி மாவட்டத்திற்கு விவசாய பயன்பாட்டிற்காக கேரள மாநிலத்தில் இருந்து 1,300 டன் எப்.ஏ.சி.டி உரம் 21 வேகன்களில் சரக்கு ரெயில் மூலம் நேற்று திருச்சி குட்ஷெட் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி, அதிகாரிகள் மேற்பார்வையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தேவையான பகுதிகளுக்கு உரமூட்டைகளை அனுப்பி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story