கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம்


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 19 July 2021 1:03 AM IST (Updated: 19 July 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணிக்கு வீட்டில் பிரசவம் நடந்தது.

அன்னவாசல்
இலுப்பூர் அருகே உள்ள ஈச்சங்குடியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தனலட்சுமி (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் தனலட்சுமி மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனே, உறவினர்கள் இலுப்பூரில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. ஆனால், தனலட்சுமிக்கு பிரசவலி அதிகரித்தது. இதனால், நிலைமையை உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அருண்பாண்டியன், பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் தனலட்சுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், ஆம்புலன்சில் தாயும், சேயும் ஏற்றப்பட்டு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை தனலட்சுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Next Story