திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிதி நிறுவன அதிபருக்கு கத்திக்குத்து
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிதி நிறுவன அதிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி (வயது 43). இவர், என்.ஜி.ஓ. காலனியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தின் மூலம் சாணார்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (28), அவருடைய தம்பி பிரபாகரன் (27) ஆகியோர் சரக்கு வாகனம் ஒன்றை வாங்கினர்.
இதுதொடர்பாக சகோதரர்களுக்கும், சிவசுப்பிரமணிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் பிரவீன்குமார், பிரபாகரன் ஆகியோர் தங்களது தாய் ஜெயமாலாவுடன் (45) திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது சரக்கு வாகனம் கடன் தொகை குறித்து பேச வேண்டும் என்று கூறி சிவசுப்பிரமணியை பஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர்.
இதையடுத்து சிவசுப்பிரமணியிடம், அவர்கள் 3 பேரும் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து கத்தியால் சிவசுப்பிரமணியை குத்தினர். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், 2 மகன்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story