பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் விஷ்ணு தகவல்


பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் விஷ்ணு தகவல்
x
தினத்தந்தி 19 July 2021 1:45 AM IST (Updated: 19 July 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நெல்லை:
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

நெல்லை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ள பயனாளிகள் தங்கள் குழந்தைகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது நிறைவடைந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு திட்ட வைப்புத்தொகைக்கான ரசீதுகள், குழந்தைகள் பிறப்பு சான்று, குழந்தைகளின் வங்கி கணக்கு, குழந்தைகளின் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்று, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வுத்தொகை பெறுவதற்கு நெல்லை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு...

இந்த ஆவணங்கள் சென்னை தமிழ்நாடு மின் விசை அடிப்படை நிதி நிறுவன மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பப்பட்டு அந்த நிறுவனம் மூலம் தங்களது குழந்தைகளின் வங்கி கணக்கில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை ரூ.25 ஆயிரம் வட்டியுடன் வரவு வைக்கப்படும்.
எனவே விண்ணப்பங்களை ‘மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107 சுப்ரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை-627002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462- 2576265 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story