பரோலில் வந்து தலைமறைவான 11 கைதிகளை பிடிக்க தீவிரம்
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைான 11 கைதிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
பெங்களூரு:
11 கைதிகள் தலைமறைவு
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அதன்படி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து பரோலில் வந்த 11 கைதிகள் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்து வந்திருந்த 11 கைதிகள் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
வழக்குப்பதிவு
இதுதொடர்பாக அந்த கைதிகள் எந்த போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தார்களோ, அந்த போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுபற்றி சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த 15 ஆண்டுகளில் பரோலில் வெளியே வந்த 11 கைதிகள் தலைமறைவாகி உள்ளனர். ஒரு சில கைதிகளின் சிறைவாசம் முடிந்து விட்டது. ஆனாலும் பரோலில் வந்து தலைமறைவானதால், பரோல் விதிமுறைகளை மீறியதாக, அவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது," என்றார்.
Related Tags :
Next Story