உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 19 July 2021 11:22 AM IST (Updated: 19 July 2021 11:22 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கருமாணிக்கம் எம்.எல்.ஏ. பேசினார்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகர், வட்டார, பேரூராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளரும் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளருமான பினுலால் சிங், மாநில செயலாளர்கள் சீனிவாசன், ஆனந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்திற்காக பாடுபட்ட நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

தொடர்ந்து மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மேலும், பல்வேறு கட்சிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கருமாணிக்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:- தமிழகத்தில் வருகிற செப்டம்பரில் கிராம ஊராட்சிகளுக்கும், டிசம்பரில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். மக்களை நேரடியாக அணுகி பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

உங்களால் முடியாத பிரச்சினைகளை என்னிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பேன். கடந்த நாடாளுமன்ற, உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வென்றது போல இந்த தேர்தலிலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் பாரிராஜன், மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் கவுசிமகாலிங்கம், பொருளாளர் ராஜாராம் பாண்டியன், துல்கிப்கான், காமராஜ், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது பாண்டியன், ஆர்ட்கணேசன், ஆர்.எஸ்.மங்கலம் சுப்பிரமணியன், மனோகரன், போகலூர் முனீஸ்வரன், நகர் தலைவர்கள் கோபி, அஜ்மல் கான், அகமது கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story