குன்னத்தூர் வாரச்சந்தை கூடியது


குன்னத்தூர் வாரச்சந்தை கூடியது
x
தினத்தந்தி 19 July 2021 6:24 PM IST (Updated: 19 July 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் வாரச்சந்தை கூடியது

குன்னத்தூர்
குன்னத்தூர் வாரசந்தை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பெரிய சந்தை ஆகும். குன்னத்தூர் சந்தை வாரா வாரம் திங்கட்கிழமை நடைபெறும். குன்னத்தூர் சந்தைக்கு காய்கறிகள் மட்டுமன்றி நாட்டுமாடு, நாட்டு மாட்டு கன்றுகள், செம்மறியாடு, வெள்ளாடு, கோழி, கறி கோழி, கட்டு சேவல்கள் விற்பனைக்கு வரும். கொரோனோ தொற்றின் காரணமாக கடந்த 2 மாதங்களாக சந்தை நடைபெறாததால், இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள், கோழிகள், கட்டு சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வராமல் இருந்தார்கள்.
இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று குன்னத்தூர் சந்தை நடைபெற்றதால் பெருமளவில் செம்மறியாடு, வெள்ளாடுகள், கோழிகள், கட்டு சேவல்கள் விற்பனைக்கு வந்தன. தற்போது ஆடி மாதம் நடைபெறுவதால் பொதுமக்கள் ஆடி மாதத்தில் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கும் குலதெய்வங்களுக்கும் நேர்த்திக்கடனாக கிடாய் வெட்டி பொங்கல் வைப்பது வழக்கம். அதனால் சந்தைக்கு ஆட்டு கிடாய்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. 20 கிலோ எடை கொண்ட கிடாய் ரூ.12 ஆயிம் முதல் ரூ.15ஆயிரம் வரை விற்பனையானது.

---
படம் உள்ளது.
----

Next Story