நல்லம்பள்ளி அருகே சேலம் மத்திய சிறைக்காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை


நல்லம்பள்ளி அருகே சேலம் மத்திய சிறைக்காவலர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 July 2021 10:14 PM IST (Updated: 19 July 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே சேலம் மத்திய சிறைக்காவலர் விஷம் குடித்து தற்கொலை முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள சேசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 27). இவர் சேலம் மத்திய சிறையில் சிறைக்காவலராக பணியாற்றி வந்தார். விஜய்க்கு திருமணமாகி அம்சவேணி (23) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விஜயை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக்காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story