சங்கராபுரம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம்


சங்கராபுரம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 19 July 2021 10:52 PM IST (Updated: 19 July 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்


சங்கராபுரம்

மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டா ஸ்ரீதர் தொடங்கி கிவைத்தார். சங்கராபுரம் வட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் வீடு, வீடாக சென்று விடுபடாமல் தடுப்பூசி போட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

முகாமில் தாசில்தார் சையத்காதர், மருத்துவஅலுவலர்கள் சூர்யா, சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியப்பன், பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் தாமோதரன், திருமலை, கிராம நிர்வாக அலுவலர்கள் கலையரசன், நிமிலன், கிராம சுகாதார செவிலியர்கள் சல்மாபீ, லதா சுமதி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர். முகாமில் 24 மாற்றுத்திறனாளிகள், 9 கர்ப்பிணிகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து சங்கராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான தடுப்பூசி முகாமையும் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

Next Story